மணத்தக்காளி வற்றல்:
மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
சுண்டைக்காய் வற்றல்:
வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து, உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது.
வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது.