குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும்.
பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால் 6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
Also Read: வயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் மல கிருமிகளை போக்க எளிய மூலிகை மருத்துவம்..
இப்போது குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத 8 வகையான மருந்துகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.
ஆஸ்பிரின் (Aspirin)
மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.
இருமல் மற்றும் சளி மருந்துகள்
குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
Read this also: குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தால் என்ன செய்வது ?
குமட்டலை தடுக்கும் மருந்துகள்
மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.
பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்
பெரியவர்கள் சாப்பிடும் மருந்துகளை சிறிதளவு கூட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளை விட, கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் சற்று அடர்ந்த நிலையில் இருப்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வேறொரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்
மற்ற குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, உங்கள் குழந்தைக்கு கொடுத்தாலும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.
காலாவதியான மருந்துகள்
காலாவதியான மருந்துகளை உடனடியாக மருந்து பெட்டியில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும் நிறம் மாறிய மருந்துகளையும் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் காலாவதியான மருந்துகளின் திறன் செயலிழந்திருக்கும். மேலும் அது உயிருக்கே பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.
Read this also: வேண்டாத மாத்திரைகளை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன செய்வது ?
கூடுதலான அசிடமினோஃபென்
காய்ச்சல் மற்றும் உடம்பு வலியை குறைக்கும் மருந்துகள் பலவற்றிலும் அசிடமினோஃபென் (acetaminophen) கலக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதனை பற்றி சரியான அறிவு இல்லையென்றால், உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
மெல்லும் தன்மையுள்ள மருந்துகள்
மெல்லும் தன்மையுள்ள மருந்துகள் அல்லது மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுடைய தொண்டை குழியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குழந்தை திடமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க நினைப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் மாத்திரைகளை பொடியாக்கி, அவற்றை குழந்தைகளின் உணவில் கலந்து கொடுக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டு பின்னரே கொடுக்க வேண்டும்.
Read this also: குழந்தைகள் காது அல்லது மூக்கில் சிறு பொருட்களை போட்டுக்கொண்டால் என்ன செய்வது ?
Via FB ஆரோக்கியமான வாழ்வு
Social Plugin