எங்கள் வீட்டிலும் என் மனைவிக்கும், என் அம்மாவுக்கும் ஏதோ மனவருத்தம்.
ஒரு நாள் என்னிடம் சொன்னாள்,
"உங்க அம்மா எனக்கு அதைக் கொடுத்தேன்,இதைக் கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அது எனக்கு சுத்தமா பிடிக்கலை ... அவங்க கொடுத்த கொடுத்த பொருளையெல்லாம் அவங்க
மூஞ்சியிலேயே தூக்கி எறிஞ்சிடப் போறேன்"
" அவங்களோட பொருள் என்னது நம்மகிட்ட இருக்கு?"
"அம்மி கல்லு, உரலு, உலக்கை ... இந்த மாதிரி பொருள்தான்"
" நீ சொல்வது சரிதான் ... (சோறு கிடைக்கவேண்டுமே)... அம்மா ஊரில் அல்லவா இருக்கிறார்கள் ... இங்கிருந்து எப்படி எறிவாய்?"
கேள்வி கேட்டு மடக்கிட்டேன்ல!
அவள் சொன்னாள்,
"அதனாலென்ன ... அவங்க புள்ளைதானே நீங்க ...பெத்தவங்க செஞ்ச பாவம் புள்ளைங்களைத்தானே வந்து சேரும்???"
"????????"