வழியில் சேறும் சகதியுமாக இருந்த பாதையில் கார் சிக்கிக் கொண்டது.
சேற்றிலிருந்து காரை எடுக்க முயற்சித்தேன்.முடியவில்லை.
அப்போது எதிரில் ஒரு விவசாயி மாடுகளுடன் வந்து கொண்டிருந்தான். அவரிடம் சென்று நான் உதவி கேட்க,
"எனக்கு 500 ரூபாய் கொடுத்தால் சேற்றிலிருந்து காரை வெளியே எடுத்து தருகிறேன்" என சொன்னார் அந்த விவசாயி.
நானும் அதை ஒப்புக்கொள்ள மாடுகளின் உதவியோடு சில நிமிடங்களில் கார் சேற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
"இன்று காலையிலிருந்து இந்த சேற்றில் சிக்கிக் கொண்ட கார்களை மீட்டுக் கொடுத்தவகையில் உங்களுடையது பத்தாவது கார்" என்றார் விவசாயி பெருமிதத்தோடு.
ரொம்ப நல்ல மனிதர் போலிருக்கிறது என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
சுற்றிலும் இருந்த வயல்வெளிகளைப் பார்த்த நான்,
"இப்படியே அடுத்தவர்களுக்கு உதவி கொண்டிருந்தால் உங்களுடைய வயலில் எப்போதுதான்
அதற்கு அவர் சொன்னார்,
"இரவில் இந்தப் பள்ளத்தை தண்ணீர் ஊற்றி சேறாக்குவதற்கே நேரம் சரியாக இருக்கும் ... வயலில் எப்படி வேலை செய்வது?"
===அடப்பாவி மகனே! ... உன்னைப்போய் நல்லவன்னு நினைச்சிட்டேனேடா!!