Type Here to Get Search Results !

"கூரான மூளைகளை கூட கூமுட்டைகளாக ஆக்கும் நாமக்கல் பள்ளிகள்"

Namakkal School Scams | thanoiyar palligal plus two mark result scams | namakkal schools private school HSC result scams

Namakkal School Scams | thanoiyar palligal plus two mark result scams | namakkal schools private school HSC result scams, கூரான மூளைகளை கூட கூமுட்டைகளாக ஆக்கும் நாமக்கல் பள்ளிகள்
தனியார் பள்ளிகளில் நடக்கும் கேவலங்களை பற்றி முகநூல் ரவி எழுதிய கட்டுரை.

Sunday Exclusive - Thathu Pithu - Namakkal School Scams - இன்று சன்டே என்பதால் வழக்கம் போல மேல் மாடிக்கு லீவு விட்டு தத்துபித்து. இன்று தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது "கூரான மூளைகளை கூட கூமுட்டைகளாக ஆக்கும் நாமக்கல் பள்ளிகள்".

ஒரு நாட்டின் சாபமே தனியார் விற்க வேண்டிய சாராயத்தை அரசு விற்க, அரசு செயல்படுத்த வேண்டிய கல்வியை தனியார் தாந்தோனிகள் கல்லா கட்ட இதை விட கலிகாலம் என்ன இருக்கிறது. இந்த கொடுமை ஒரு புறம்

என்றால் இன்னொரு பக்கம் 92 முதல் 100% விகிதம் பரிட்சை ரிஸல்ட்கள். இது கொஞ்சம் மாறி போய் இப்போது இதை ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங் அல்லது மூனு சீட்டு மோடி மஸ்தான் வேலையை தான் பள்ளிகள் செய்கின்றனர் அதிலும் அதிகமாய் செய்வது நாமக்கல் / கரூர் / திருப்பூர் / கோவை போன்ற தொழிலதிபர்கள் நிறைந்த மானிலத்தில். ஏன் இங்கு என்றால் இங்கு தான் ஒவ்வொரு சராசரி தொழிலதிபரிடமும் காசு அதிக அளவில் கேஷாய் புரளும், அதை விட வட்டிக்கு விடும் செல்வந்தர்கள் அதிகம் நிறைந்த இடம், கடைசியாக டாலர் குவிக்கும் லோக்கல் ஷேக்குகள். இந்த மாதிரி ஒரு பொட்டன்ஷியல் நிறைந்த இடத்தில் தான் இந்தியாவின் எந்த ஒரு ஏமாற்று வியாபரமும் முளைக்கும் அது ஈமு கோழி முதல் ஐடி பிராசஸிங் வரை.

அப்படிபட்ட இந்த செல்வம் மிகுந்த இடத்தில் போன தலைமுறையை பார்த்தீர்கள் என்றால் அதிகம் படித்திராதவர்கள் தான் மிக அதிகம். அவர்களின் ஏக்கம் எல்லாம் நம் பிள்ளைகள் ஒரு நல்ல டாக்டர் / ஆடிட்டர் எனத்தான் நினைப்பது வாடிக்கையாகீட்டது. கல்லூரி என்று கோட்டா சிஸ்டம் / மெரிட்டில் இடம் கிடைக்க பெறுகிறதொ அந்த நாள் முதல் இந்த பிள்ளைகள் அதிக மதிப்பென்களை பெற முனைகின்றனர். இதை பார்த்த பல பள்ளிகள் சாராய வியாபாரமான தனியார் வைன்ஷாப் மூடின உடன் பல ஆரம்ப கல்வி கூட பயிலாத கல்வி தந்தைகள் சிலர் ஊருக்கு ஒதுக்குபுறமாய் பொறியாளர் கல்லூரிகளையும் மிச்சம் உள்ளவர்கள் இந்த மாதிரி ஹை டெக் பள்ளீகளையும் கட்டினர். இது ஒரு ஒன்வே ஜெயிலாகும் இதில் படிக்கும் பிள்ளைகளின் நிலைமையை தான் நாம் காணப்போகிறோம். பெரும்பாலான பள்ளிகளின் நோக்கம் படிப்பு கற்பிப்பது தானே தவிர அதை வைத்து வியாபாரம் செய்ய அல்ல. அந்த வகையில் இந்த பள்ளிகள் ஓரளவுக்கு சுமாராக படிக்கும் பிள்ளைகளின் புகைப்படங்களை பிளக்ஸில் போட்டு எங்கள் மாணவர்களின் மார்க்குகள் என்று பள்ளீ முன்பு, பள்ளி முக்கில் ஆரம்பித்து பாளை புது பஸ் ஸ்டான்டு வரை வைத்து மார்கெட்டிங் செய்கின்றனர்.

எதையும் யோசிக்காமல் போகும் ஆட்டு மந்தை கூட்டங்களின் அடுத்த வாரிசுகளான நாமும் உள்ளே நுழையும் நேரத்தில் ஆரம்பித்து பெரிய கேப்பிடேஷன் பள்ளீ படிப்புக்கே கொடுக்கின்றனர் இந்த செல்வந்தர்கள். இவர்களுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் பெரிசு இல்லை என்பதால் இந்த பள்ளிகளுக்கு சீட்டை நிரப்புவது எளிதாகிறது. 10 ஆம் வகுப்பு முடிந்த உடன் கல்லூரி படிப்புக்கு அடித்தளமாக உள்ள + 1 படிப்புகளை படித்தால் தான் +2வில் ஓரளவு தேறி கல்லூரியின் படிப்பை புருந்து கொள்ள முடியும். ஆனால் இவர்கள் ஏழு மாசத்தில் கையை விட்டு குழந்தையை எடுக்கும் முறையை தான் கையாளூகிறார்கள். 10 ஆம் வகுப்பு முடிந்த உடனே இவர்கள் பள்ளியில் பிள்ளைகளை அடைத்து வைத்து நேராக +2 ஸிலபஸை எடுக்க ஆரம்பித்து +1 தனியார் தேர்வு என்பதால் யாருக்குமே தெரியாது இவர்களின் பித்தலாட்டம். இவர்கள் 10 வகுப்பு 4 மாத விடுமுறை + 1 ஒரு வருஷம் +2 ஒரு வருஷம் என ஒரு 9 மாத +2 படிப்பை 2 அரை வருஷமாக இவர்களுக்கு இரவு பகலாக ஏற்றி இந்த பிள்ளைகளை ஒரு கூமுட்டை வடிவமாக மாற்றி விடுகின்றனர். சில பள்ளிகளீன் பெற்றோர் உள்ளூரில் இருந்தால் கூட இவர்களை பள்ளி ஹாஸ்டலில் தங்க வைக்கும் கொடுமை. சில பள்ளிகள் காலை 6 மனிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை டார்ச்சர் செய்து படிக்க வைக்கின்றனர்.

சரி இது நல்ல விஷயம் என்று நீங்கள் கேட்டால் இதில் தான் சூட்சுமம் இருக்கிறது. இந்த பிள்ளைகளை + 2 எக்ஸாமுக்கு 6 மாதம் முன்னாள் பழைய பொது தேர்வு கொஸ்டீன் பேப்பரை வைத்து இவர்களுக்கு உள் பள்ளி பரிட்சை நடத்தி இதில் 70% கீழே வரும் மாணவர்களை + 1ல் நீ ஃபெயில் அதனால் நீ இன்னும் ஒரு வருடம் கழித்து தான் 2 எழுத முடியும் என 3 அரை வருட படிப்பாக்கீடுகின்றனர். சில பிள்ளைகளை ஆயிரம் லொல்லு சொல்லி அவர்களாய் ஒரு பிரச்சனையை கிளைப்பி பல்ளி விட்டு டிஸி கொடுத்து அனுப்புகின்றனர். இந்த மிச்சம் இருக்கும் பிள்ளைகளுக்கு டி பி ஐ மற்றும் கொஸ்டின் செட் செய்யும் ஆட்களுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து கேள்விகளை அவுட் செய்கின்றனர். அதை பரிட்சைக்கு ஒரு வாரம் முன்னே இந்த கேள்விகளை கட்டாயம் படியுங்கள் என கூறி அலெர்ட் செய்து 70% - 90% ஆகிறது. அது போக பள்ளிகள் கடைசி பாகமான பரிட்சை நேரத்தில் இவர்களுக்கு புக்கை வைத்து காப்பி அடிக்க கூட உதவி செய்து 98 - 100% சதவிகிதம் கிடைக்க செய்ததில் மட்டும் காமராஜர் மெட்ரிகுலேஷன் ஹை ஸ்கூல் போன்ற பல பள்ளிகளை கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர் அதிகாரிகள். இவர்கள் இந்த பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுப்பது மட்டுமில்லாமல் இவர்கள் காற்று இறக்கபட்ட பளூனாய் கல்லூரி படிப்புகளின் மங்கி போகின்றர் அது போக இவர்களால் நேர்மையாக படிச்சு பாஸ் பன்ணீன 90 + மார்க் ஸ்டூன்ட்களுக்கு மருத்துவ மற்றூம் உயரிய படிப்புகள் நிராகரிக்கபடுவது தான் ஆக சோகம்.

இந்த ஹை மார்க் எடுத்த நாமக்கல் பள்ளி பிள்ளைகளை அரசு கண்கானிப்பில் ஒரு தேர்வு அல்லது ஜெனரல் டெஸ்ட் வைத்தால் 60 மார்க் வாங்குவது கூட கடினம் என்று கூறி மிச்சம் உள்ள அனுமானத்தை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.


- Ravi Nag   Namakkal School Scams | thanoiyar palligal plus two mark result scams | namakkal schools private school HSC result scams | கூரான மூளைகளை கூட கூமுட்டைகளாக ஆக்கும் நாமக்கல் பள்ளிகள்