Type Here to Get Search Results !

குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி ..முக்கிய விஷயங்கள்

Kulandhai valarppu murai | nalla palakkam | குழந்தை வளர்ப்பு முறை | குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி முக்கிய விஷயங்கள்

"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்

குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி ..முக்கிய விஷயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.



Kulandhai valarppu murai | nalla palakkam | குழந்தை வளர்ப்பு முறை | குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி முக்கிய விஷயங்கள் 
1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்..அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள்.

2.உடல் எனபது தனிப்பட்டவரின் உடமை..அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை.தாய்,தந்தை கூட சில வயது வரைதான்.

3.எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.

4.உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்ட கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே "No "சொல்ல கற்று கொடுக்கவேண்டும்.உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.

5.நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லை குடும்பத்தில் நெருக்கமானவர்களை கூறி அவர்களிடம் உடனே விஷயத்தை கூற சொல்லி கொடுக்க வேண்டும்.

6.நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விஷயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும்..அல்லது வெளியில் நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லலாம்.அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்..

7.குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்கமுடியாதபடி செயல்படுவார்கள்.பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்....எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.

8.முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.எனவே குழந்தைக்கு பரிசு வாங்கி கொடுபவர்கள் எல்லாம் மிக அனபுடையவர்கள் என்று நாம் போதிக்க கூடாது.அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.

9.குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ,கட்டி பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது.அது சரி என்று வாதம் செய்ய கூடாது.மாமா எத்தனை ஆசையா இருக்கார்..போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.

10.அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும் ..யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

11.டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்து கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.

12.யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும்.பயம் இருக்க கூடாது.நேருக்கு நேர் பேச..மனதை திறந்து பேசும் சூழல் வேண்டும்.

13.தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும்,அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.

14.அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்..அம்மா ,அப்பாவை கொன்றுவிடுவேன்..உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று...யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.

15.குழந்தைகள் இதை போன்ற விஷயங்களை கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது.அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விஷயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.

16.நான் கொடுத்த படத்தில் வெள்ளை பகுதிகள் பாதுகாப்பு பகுதியாகவும்..மஞ்சள் பகுதிகள் அடுத்த வகையுலும் சிவப்பு பகுதிகள் யாராலும் தொடக்கூடாத பகுதிகளாக படத்தை காட்டி விளக்கினால் எளிதாக புரியும்.

17.ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிக சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.

18.இந்த வீடியோ உங்கள் பள்ளியுள்ளும்,வீட்டிலும் போட்டு காட்டலாம்.ஷேர் செய்யலாம்.http://www.youtube.com/watch?v=6aH8Rwax09A

19.குறிப்பிட்ட இந்த லிங்க்கை படித்து கற்பிக்கலாம் .ஆழ்ந்து படிக்கவும். http://www.underwearrule.org/howto_en.asp.
http://www.underwearrule.org/source/text_en.pdf

20.குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,மற்றோரும் உணர வேண்டும்.அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும். Kulandhai valarppu murai | nalla palakkam | Child development | teach your child | teach good habits to your child | educate your kids | kids secret life | teach kids | kids education | kids development | child psychology | parenting tips | parents and child | pre-school kids education | kindergarden kids | baby care | child care | kids care | good tocuh bad touch | playing childs | playing kids | childs toys | குழந்தை வளர்ப்பு முறை | குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி முக்கிய விஷயங்கள்