Type Here to Get Search Results !

செத்தால் சாகட்டும் விடுங்க!.. ☹

Vandi adhiga vegamaa ottum ila vayasu pasanga | seeraliyum maanavargal | Speed thrills but kills | vaaganam ottuvadhil vegam vendaam | bike accident | Two wheeler accident

இன்று மாலை என் வீட்டுக்கு அருகில் நடந்த ஒரு நிகழ்வின் தொகுப்பு:-

எங்கள் வீட்டின் அருகில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்கள் இருவர் தங்களது இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்று அருகில் உள்ள வளைவில் திருப்ப இயலாமல் எதிரே வந்த டெம்போவில் நேருக்கு நேராக மோதி பயங்கரமாக தூக்கி வீசப்பட்டு விழுந்தனர்..அநேகமாக அவர்கள் வந்த வேகம் ஒரு 130 வேக அளவில்
இருக்கும்.....உடனே நாங்கள் அனைவரும் அங்கு சென்று விட்டோம்...கூட்டம் கூடி விட்டது....அந்த இரு சக்கர வாகனம் கூடையில் பொருக்கி கொண்டு தான் போக வேண்டும் போல...அப்படி கிடந்தது சத்தி சாலையில்....மாணவரில் ஒருவர் முன் மண்டை இரண்டாக பிளந்து உள்ளே இருக்கும் எலும்பு தெரியும் வண்ணம் ரோட்டில் ரத்தம் ஆறாக ஓடியது...இன்னொரு மாணவர் ஓரளவு அடி...ஆனாலும் கை தனியாக தொங்கி கொண்டு இருந்தது கொடுமை...மண்டையில் அடிபட்ட மாணவர் பிழைத்தால் அது கடவுளின் செயலாகவே இருக்கும்...அதற்குள் அவர்களின் கைபேசிகளை வாங்கி அவரவர் வீடுகளுக்கு போன் பண்ண அவர்களின் கைபேசியை எடுத்து அப்பா என்று இருந்த எண்ணுக்கு அழைத்தோம் ..அவர் கை பேசி எடுக்கவில்லை...இன்னொரு மாணவன் அவரே தன தந்தைக்கு அழைத்து விசியத்தை சொன்னார் அதற்குள் போன் கட் ஆகிவிட்டது மறுபடியும் போன் பண்ணி சொன்னார் கட் ஆகி விட்டது..அருகில் இருந்த எங்களில் ஒரு வாங்கி அவரின் அப்பாவுக்கு அழைத்தார்...எடுத்த அவரிடம் உங்கள் மகன் இங்கு அடிபட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் உடனே வாருங்கள் என்றார்...இங்கு தான் எங்களுக்கு மாபெரும் அதிரிச்சி காத்து இருந்தது....அந்த தந்தை என்ன சொன்னார் தெரியுமா ??? செத்தால் சாகட்டும் விடுங்கள் என்று....என்ன கொடுமை பாருங்கள்....இத்தனைக்கும் அவர் ஒரு காவல் துறை அதிகாரியாம்.....பிறகு அந்த மாணவரின் ஆண்ட்டி என்று இருந்த எண்ணுக்கு அழைத்தோம் எடுத்த அவர்கள் சொன்ன பதில் அதை விட ....விடுங்கள் அவன் சாகட்டும் என்று ........பின் நாங்கள் அந்த மாணவரின் அம்மாவுக்கு அழைத்து நடந்தை சொல்லி கோவை அரசு மருத்துவமனைக்கு வர சொல்லி விட்டு வைத்தோம்...அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விட்டது...இருவரையும் எடுத்து கொண்டு ஆம்புலன்ஸ் சென்று விட்டது...ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகள் மனதி விட்டு அகலவே இல்லை...அதில் ஒரு மாணவன் கண்டிப்பாக பிழைப்பது அரிது....அந்த அளவுக்கு அடி....இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் .......!!!
இதில் நாள் சில விசியங்களை குறிப்பிட விரும்புகிறேன்...

1).முதல்கண் அந்த மாணவர்கள் வந்த பைக் ஓசி பைக்..அடுத்தவரின் வண்டியை வாங்கி கொண்டு கொஞ்சமும் பயம் இல்லமால் மிக மிக அதிவேகம் எதற்கு ???

2).பெற்ற பிள்ளை விபத்தில் சிக்கிய செய்தி கேட்டவுடன் கொஞ்சமும் இறுக்கம் இல்லாமல் செத்தால் சாகட்டும் என்று சொல்லும் அந்த காவலர் தந்தை பாசம் எங்கு சென்றது ??? ஆயிரம் தவறு செய்து இருந்தாலும் பெற்ற பிள்ளை அல்லவோ அவன் .... அவரின் செயல்பாடு சரியா ???

3).பெற்ற தந்தை செத்தால் சாகட்டும் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு ஒரு மகன் நடப்பது முறையா ??? பெற்றவர்களின் பாசத்தை கொல்லும் அளவுக்கு அந்த மாணவன் நடந்துல்லான் என்பதை என்னும் போது அவன் எதிர்காலம் எப்படி இருக்கும்???

4).ஆயிரம் முறை விபத்துகளை நேரில் கண்டு தலை சுற்றி போனாலும் அவரவர் கைகளில் வண்டி வந்ததும் அதிவேகத்தில் பறந்து கொண்டு செல்வது ஏன் ??? இவர்கள் இருவரும் அப்படி வேகமாக வந்து இப்போது சாதித்தது என்ன ??? விலை மதிப்பற்ற உயிர் போகும் அளவுக்கு நடந்தது தான் மிச்சம்... இது தேவையா ???


5).விலைமதிப்பற்ற உயிருக்கு போராடும் அவர்களை காப்பாற்ற யாரோ நாங்கள் ஒன்று கூடிய நிலையில் பெற்ற அந்த தந்தை, தன் மகன் எவ்வளவு கேவலமாக இருந்திருந்தாலும் துடித்து இருக்க வேண்டும் அல்லவா ??? இல்லையே ......??? எங்கே செல்கிறது தந்தை பிள்ளை பாசம் எல்லாம் ??? பிள்ளைகள் இப்படி பெற்றோர்கள் மரத்து போகும் வண்ணம் தங்கள் செயல்பாடுகளை செய்வது சரியா ???

6).பணத்தை கொட்டினால் நம் வேலை முடிந்தது என்று பெற்றோரும், யாரு எப்படி போனால் என்ன நம் சந்தோசம் தான் முக்கியம் என்று எதையும் செய்ய துணியும் குழந்தைகளும் உருவாக காரணம் குடும்பத்தில் முறையான அன்பு பரிமாற்றங்கள் மறைந்து போனால்தால் மட்டுமே....நான் சொல்வது சரியா தவறா ???

இறைவனுக்கே வெளிச்சம் அனைத்தும்..தயவு செய்து இதை படிக்கும் நட்புகள் இதை ஒரு படிப்பினையாய் கொள்ளவும்..தங்கள் நட்புகளுக்கும் தெரிவிக்கவும் ...இது போன்று இனி யாருக்கும் நிகழ கூடாது.....

நன்றி
ராஜ்குமார்.


Vandi adhiga vegamaa ottum ila vayasu pasanga | seeraliyum maanavargal | Speed thrills but kills | vaaganam ottuvadhil vegam vendaam | bike accident | Two wheeler accident