Type Here to Get Search Results !

அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

unavu saapidum amma kavidhai அம்மா அதிகம் சாப்பிடுவாள்! | Tamil kavidhaigal | Tamil poems

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
sappadu saapidum amma அம்மா அதிகம் சாப்பிடுவாள்!unavu saapidum amma kavidhai அம்மா அதிகம் சாப்பிடுவாள்! | Tamil kavidhaigal | Tamil poems

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

உண்மைதானே..

- கோ.மோகன்ராம்
sappadu saapidum amma அம்மா அதிகம் சாப்பிடுவாள்! | Tamil kavidhaigal | Tamil poems