Type Here to Get Search Results !

இன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை

Tamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status

இன்றைய விவசாயத்தின் நிலைமை ::
Tamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை



நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....


நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _ உண்மை
இன்று புரியாது.

- வை . நடராஜன்

Tamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today farmers status| Tamil Poem | V.Natarajan poem | Tamil nadu farmers Cultivation