Type Here to Get Search Results !

ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி

நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட். | A Software Engineer started Nachalur Farmers Producers Company | சாப்ட்வேர் இன்ஜினியரின், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் | Software Engineer: ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி

கரூர்: சாப்ட்வேர் இன்ஜினியரின், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக, சென்னை மண்டலத்தில் முதல் முறையாக, கரூர், நச்சலூரில் விவசாயிகள் பங்களிப்பில் "நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட்." நிறுவனம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.


நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட். | Software Engineer Nachalur Farmers Producers Company | சாப்ட்வேர் இன்ஜினியரின், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் | கரூர் மாவட்டம் | தமிழகத்தில் விளைநிலங்கள் | விவசாயிகள் உற்பத்தி | தரமான விதைகள் | எண்ணெய் உற்பத்தி |  விவசாயிகள் |  விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் கரிகாலன் |  மாடர்ன் ரைஸ் மில் |  விவசாய நிறுவனம் |  உரிய விலை |   விவசாய இடைத்தரகர்கள் | விவசாய விற்பனை | விவசாய பொருட்கள் கொள்முதல் | வேளாண்மை புரட்சி

Karur district Collecter giving certificate to Nachalur Farmers Producers Company Director G.Karikalan


கரூர் மாவட்டம், நச்சலூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் கரிகாலன். இவர் கம்ப்யூட்டர் பிரிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவிட்டு, 15 ஆண்டுகாலமான சென்னை, பெங்களூர், ஹைராபாத் ஆகிய நகரங்களில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.இவர் விவசாயத்தின் மேல் உள்ள, "காதல்' காரணமாக, வேலையை உதறிவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திருப்பினார். அங்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கரும்பு நாற்கால் உருவாகியுள்ளார். இருப்பினும் உர தட்டுப்பாடு, உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது ஆகியவை கண்டு கவலையடைந்தார்.இதையடுத்து அவருக்கு, விவசாயிகள் பங்களிப்புடன் விவசாய நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட். | Software Engineer Nachalur Farmers Producers Company | சாப்ட்வேர் இன்ஜினியரின், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் | கரூர் மாவட்டம் | தமிழகத்தில் விளைநிலங்கள் | விவசாயிகள் உற்பத்தி | தரமான விதைகள் | எண்ணெய் உற்பத்தி |  விவசாயிகள் |  விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் கரிகாலன் |  மாடர்ன் ரைஸ் மில் |  விவசாய நிறுவனம் |  உரிய விலை |   விவசாய இடைத்தரகர்கள் | விவசாய விற்பனை | விவசாய பொருட்கள் கொள்முதல் | வேளாண்மை புரட்சி
நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட் | Nachalur Farmers Producers Company, Karur

தமிழகத்தில் விளைநிலங்கள், "விலை' நிலங்களாக மாறி வருகிறது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக, விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். அப்படி உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு, லாபகரமான விலை கிடைக்குமா? என்பது கேள்விகுறியாக உள்ளது. குறைந்தபட்சம் சாகுபடி செலவானது மிஞ்சுமா? என, ஒவ்வொரு சீஸன்களிலும் எதிர்பார்த்து, அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய விலை கிடைக்குமா? என்பது, உற்பத்தி பொருட்களை பொறுத்தே அமைக்கிறது. உதாரணமாக விவசாயி ஒரு பொருளை, பத்து ரூபாய்க்கு விற்பனை செய்தால், பத்து இடைத்தரகர்கள் கைமாறி, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிக்கு கிடைப்பது, பத்து ரூபாய் என்றால், எந்த வலியும் இல்லாமால், இடைத்தரகர்களுக்கு, 50 ரூபாய் லாபம் கிடைக்கிறது. மேலும் அரசின் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்கி வந்தாலும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.

இதை தடுக்கும் வகையில் விவசாயிகளே ஒன்று சேர்ந்து, விவசாய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளனர்.

நச்சலூர், கீழப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன் ஆலோனை நடத்தினார். இதன் விளைவாக முதலில், 30 விவசாயிகள், தலா, 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் துவங்கினர். பின், 2012 ஜூன், 13ம் தேதி, "நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட்.,' என்ற பெயரில் கம்பெனியாக பதிவு செய்துள்ளார். இப்போது, 120 விவசாயிகள் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம் பங்குத்தொகை செலுத்தியதில் மொத்தம், 30 லட்சம் ரூபாய் முதலீடு குவித்துள்ளது.

விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் கரிகாலன் கூறியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், விவசாயி, தன் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இது போன்ற நிறுவனங்கள் பீகார், மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.நமது மாநிலத்தில் நிறுவனங்களை பதிவு செய்ய, சென்னை, கோவை மண்டலங்களில் அலுவலகங்கள் உள்ளது. ஏற்கனவே கோவை மண்டலத்தில் விவசாயிகள் சார்பில், இரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. ஆனால், சென்னை மண்டலத்தில், எங்கள் நிறுவனம் தான் முதல் விவசாய கம்பெனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விவசாயிகளுக்கு நல்ல தரமான உரம், பூச்சி கொல்லி மருத்து கிடைக்க வேண்டும் என்ற வகையில், நச்சலூரில் எங்கள் நிறுவனம் சார்பில், உரம் விற்பனை நிலையம் துவங்கியுள்ளோம். இங்கு வெளி மார்க்கெட்டில் மூட்டை (50 கிலோ), 1,000 ரூபாய்க்கு விற்பனையாகும் பாக்டெம்பாஸ் உரம், 930 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைபோல, 900 ரூபாய்க்கு விற்பனையாகும் பொட்டாஷ், 840 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் யூரியா, 272 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறோம். உர நிறுவனங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதாலும், குறைந்த சதவீத லாபம் வைக்கப்படுவதாலும் தான், அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறது. சில உரங்கள். அரசு விலையை விட குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட். | Software Engineer Nachalur Farmers Producers Company | சாப்ட்வேர் இன்ஜினியரின், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் | கரூர் மாவட்டம் | தமிழகத்தில் விளைநிலங்கள் | விவசாயிகள் உற்பத்தி | தரமான விதைகள் | எண்ணெய் உற்பத்தி |  விவசாயிகள் |  விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் கரிகாலன் |  மாடர்ன் ரைஸ் மில் |  விவசாய நிறுவனம் |  உரிய விலை |   விவசாய இடைத்தரகர்கள் | விவசாய விற்பனை | விவசாய பொருட்கள் கொள்முதல் | வேளாண்மை புரட்சி
நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட் | Nachalur Farmers Producers Company, Karur

தற்போது விவசாயிகள் தரமான விதைகள் கிடைப்பதில் பல சிக்கல் உள்ளது. தரமான விதையை விதைத்தால் மட்டுமே, நல்ல விளைச்சலை விவசாயிகள் செய்ய முடியும். இதன் விளைவாக, நெல் விதை உற்பத்தி கூடம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் அதிக விளைச்சல் தரும் நெல் விதைகளை உற்பத்தி செய்ய உள்ளோம். பின் மாடர்ன் ரைஸ் மில், எள்ளிலிருந்து எண்ணெய் உற்பத்தி போன்ற விவசாய மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்து, நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய உள்ளோம்.இறுதியாக கம்பெனியாக பதிவு செய்வதுக்கு, பல நடைமுறை சிக்கல் இருக்கிறது.பெரிய மற்றும் சிறிய கம்பெனிகளுக்கு பதிவு செய்ய சட்டம், விதிமுறைகள் ஒரே மாதிரி இருப்பதால், சிறிய நிறுவனங்கள் பதிவு செய்ய சிரமப்படுகின்றன. மேலும் எங்களை போன்ற விவசாயிகள், நிறுவனமாக பதிவு செய்ய, எந்த முன்மாதிரியும் இல்லாததால், படாதபாடு படுகிறோம்.

மத்திய அரசின், 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாய நிறுவனங்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் மனியம் அளிப்பதாக அறிவித்து உள்ளது. இதைபோல, எங்களை போன்ற நிறுவனங்கள் பதிவு செய்வதில் உள்ள சிரமங்களை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=687538

நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட். | Software Engineer Nachalur Farmers Producers Company | சாப்ட்வேர் இன்ஜினியரின், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் | கரூர் மாவட்டம் | தமிழகத்தில் விளைநிலங்கள் | விவசாயிகள் உற்பத்தி | தரமான விதைகள் | எண்ணெய் உற்பத்தி | விவசாயிகள் | விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் கரிகாலன் | மாடர்ன் ரைஸ் மில் | விவசாய நிறுவனம் | உரிய விலை | விவசாய இடைத்தரகர்கள் | விவசாய விற்பனை | விவசாய பொருட்கள் கொள்முதல் | வேளாண்மை புரட்சி,

Tags