General knowledge hints தெரியுமா உங்களுக்கு Tamil quiz
* மூங்கில் ஒரு நாளில் 4 அடி உயரம் வளரும்.* முதன் முதலில் மூங்கிலிலிருந்து தான் காகிதம் தயாரிக்கப்பட்டது.
* மீன்பிடி தூண்டிலுக்கு மூங்கில் தான் பயன்படுத்தப்படுகிறது.
* 13000 அடி உயரமுள்ள இடத்தில் கூட மூங்கில் வளரும்.
* ஆசியாவில் தான் மூங்கிலின் பயன்பாடு அதிகம்.
* கம்ப்யூட்டர் நகரம் என்று அழைக்கப்படுவது சான்பிரான்ஸிஸ்கோ.
* ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை காய்க்கும்.
* பப்பாளிக் காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் இளைக்கும்.
* E-mail என்பதன் விரிவாக்கம் Electronic Mail என்பதாகும்.
* ஐ.நா.சபையில் முதலில் இந்தியில் பேசியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
* உலகில் அதிகளவில் வாழைப் பழங்களை சாப்பிடுபவர்கள் ஜெர்மானியர்களே.
* பூக்கும் தாவரங்கள் உலகில் தோன்றி 141மில்லியன் ஆண்டுகளாகின்றன.
* உலகின் மிக அதிகமான குளிரைத் தாங்குகின்ற விலங்கு நார்வே நாட்டில் உள்ள துருவ வாத்து மைனஸ் 110 டிகிரி சென்டிகிரேடும், துருவக் கரடி மைனஸ் 80 டிகிரி சென்டிகிரேடும் குளிரைத் தாங்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* பாம்பைப் போல் சட்டை உரிக்கும் உயிரினம் நண்டு.
* டால்பின்கள் திமிங்கலம் வகையைச் சார்ந்தது.
* உலகில் மொத்தம் 224 நாடுகள் உள்ளன.
* கார்பன் பேப்பரைக் கண்டுபிடித்தவர் டபிள்யூ உட்.
* நியூயார்க்கின் பழைய பெயர் பிக் ஆப்பிள்.
* கடலுக்கு அடியில் உள்ள மிகப் பெரிய மலை பசிபிக் கடலில் அமைந்துள்ளது.
* மனித எலும்பு செங்கல்லை விட முப்பது மடங்கு அதிக எடையை தாங்கக் கூடியது.
* மிகப் பெரிய நட்சத்திரமான ஐ.ஆர்.எஸ்.5 சூரியனை விட பத்தாயிரம் மடங்கு பெரியது.
* பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
* தண்ணீர் உறைநிலையில் இருக்கும் போது திரவ நிலையை விட ஒன்பது சதவீதம் அதிகம் விரிவடையும்.
* சாதாரண நீரை விட கடல் நீரில் அழுத்தம் அதிகம்.
* நாம் தூங்குவதை விட 50% அதிக கலோரிகள் தொலக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது.
* பெல்ஜியம் நாட்டின் கரன்ஸியின் பெயர் யூரோ (முன்பு பெல்ஜியன் ஃப்ராங்க்)
* பஹ்ரைன் நாட்டின் கரன்ஸியின் பெயர் பஹ்ரைன் தினார்.
* அல்ஜீரியாவின் கரன்ஸியின் பெயர் தினார்.
* ஆஸ்திரியா நாட்டின் கரன்ஸியின் பெயர் ஷில்லிங்.
* ஆப்கானிஸ்தான் நாட்டின் கரன்ஸியின் பெயர் ஆப்கனி.
* அங்கோலா நாட்டின் கரன்ஸியின் பெயர் நியூ க்வான்சா.