Type Here to Get Search Results !

'0 டயட்' உணவுகள் சுகருக்கு மாற்று என நினைப்பவரா நீங்கள், இந்த செய்தி உங்களுக்கு அதிர்ச்சியை தரும்..!

0

சாக்ரின் கலந்த '0 டயட்' உணவுகள் சுகருக்கு மாற்று என நினைப்பவரா  நீங்கள்? சாக்ரின் குறித்த இந்த செய்தி அதிர்ச்சியை தரும் உங்களுக்கு..!

saccharin in 0 diet drinks and tooth paste causes Cancer. saccharin as alternative for Sugar patients.Health issues, Awareness post in Tamil  'சாக்ரின்' எனப்படும் செயற்கை இனிப்பூட்டி

சர்க்கரையை விட 300 மடங்கு அதிக இனிப்பு சுவை கொண்டது சாக்ரின். ஆகவே '0 டயட்' பானங்கள், பிரபல பற்பசைகளில் சர்க்கரைக்கு பதிலாக 'சாக்ரின்' எனப்படும் செயற்கை இனிப்பூட்டி பயன்படுத்துகிறார்கள்.

அதற்க்கு காரணம் சாக்ரின் ரத்தத்தில் கலக்காது, ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாது. அதனால் அதனை 0 டயட் பானங்களில் கலந்து தயாரித்து சர்க்கரை வியாதியையும், உடல் பருமனையும் குறைக்க விரும்புவர்களை கவரும் நோக்கில் போலியாக விளம்பரம் செய்து, அவர்ளின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களது தலையில் கட்டி விடுகின்றனர்.

அன்றாடம் பொதுமக்கள் உபயோகிக்கும் பற்பசைகளை(Tooth Paste) கூட சாக்ரின் விட்டுவைக்கவில்லை என்பதுதான் மிகவும் கொடுமையான செய்தி.

சர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா..?

அது சரி அதனால் என்ன ஆபத்து வர போகிறது என கேட்க்கின்றீர்களா?

சாக்ரின் ரத்தத்தில் கலக்காது என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாது என நம்பி அதன் பக்க விளைவாக வரப்போகும் உயிர்கொல்லும் வியாதியான புற்று நோயை பற்றி தெரியாமல் சாக்ரின் கலந்த பொருட்களை விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளோம்.

ஆமாம், சாக்ரின் கேன்சரை உண்டாக்கும் பொருள். தெரிந்தோ தெரியாமலோ இனி 'சாக்ரின்' கலந்த பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை இயற்கை பொருட்களையோ, இயற்கை பானங்களையோ உபயோகித்து நவீன கால வியாதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
Dr.Bishwaroop Roy

கருத்துரையிடுக

0 கருத்துகள்