Type Here to Get Search Results !

சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் புதிய சட்டங்கள் மற்றும் அபராதா தொகைகள்

0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக விரைவில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் முயற்சியாக போக்குவரத்து விதிகளை கடுமையாக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது. இதற்கான வரைவு சட்ட மசோதா, மத்திய அரசின் இணையதளத்தில் மக்கள் கருத்து கேட்டு வெளியிடப்பட்டுள்ளது.  


Traffic rules and regulations by central government in india, Fine amounts, traffic laws, cctv camera on road, drunk and drive fine and punishments


சாலை விதிகளின் விவரம் பின்வருமாறு:

* CCTV கேமரா: சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது, போலீசார்தான் இல்லையே என்று வாகனத்தை வேகமாக ஓட்ட முடியாது. அதை சிசிடிவி கேமராவில் பார்த்து, உங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

* ஓட்டுனர் உரிமம் ரத்து: சாலை விதிகளை 2வது முறை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம், 3வது முறை மீறினால் 15 ஆயிரம் அபராதம் என தொகை அதிகரிக்கப்படும். மேலும், ஒரு கட்டத்தில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

* செல்போனில் பேசினால்: செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.4000 அபராதம் விதிக்கப்படும்.

* குழந்தைகளுடன் செல்லும்பொழுது: வாகனத்தில் குழந்தைகள் இருக்கும் போது, வேகமாக வாகனத்தை ஓட்டினால் ரூ.15 ஆயிரம் அபராதம். மேலும், சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

* குழந்தை இறந்தால்: வேகமாக சென்ற வாகனம் மோதி ஒரு குழந்தை இறந்து விட்டால்  வாகன ஓட்டிக்கு ரூ.3 லட்சம் வரையில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

* பதிவு எண்: குறைபாடு உடைய மோட்டார் வாகனங்கள் விற்கப்பட்டால், அந்த மோட்டார் வாகன நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். பதிவு எண் (ரிஜிஸ்திரேஷன்) வாங்காமல் ஒரு வண்டியை டெலிவரி செய்தால், அந்த வாகன டீலருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்: குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதாவது, போதை ஆசாமியின் உடலில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் சதவீத அடிப்படையில் அபராதம் விதிக்கப் படும். போதை தலைக்கு ஏறியிருந்தால், அதிகபட்சமான ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

* சிறை தண்டனை: சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படுவதுடன் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.


* ஓட்டுனர் உரிமம்: சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (என்எச்டிஎஸ்ஏ) போன்று, ஓர் ஆணையத்தை மத்திய அரசு அமைக்கும். ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு உள்பட அனைத்து விஷயங்களுக்கும் புதிய விதிமுறைகளை அந்த ஆணையமே வகுக்கும்.

* போக்குவரத்து பாதுகாப்பு படை: மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு படை என தனிப்படை அமைக்கப்படும். அதன் மூலம், சாலை விதிகளை யாரும் மீறாமல் கண்காணிக்கப்படும்.

* கட்டாய இன்சூரன்ஸ் திட்டம்: மோட்டார் வாகன விபத்து நிதி என்று தனியாக ஒரு நிதி ஏற்படுத்தப்படும். அதன் மூலம், வாகன ஓட்டிகள் அனைவருக்கும் கட்டாய இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு புதிதாக கொண்டுவரப்போகும்  சட்ட வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Traffic rules and regulations by central government in india, Fine amounts, traffic laws, cctv camera on road, drunk and drive fine and punishments, daily tamil news, awareness news, vehicle registration number, vaagana sattangal, kudiththuvittu vaaganam ottubavarukku abaraadham, kudi podhai, saalai vidhiagalai meeduvor meedhu paayum sattangal, kadumaiyaana abaradham , sirai thandanai, ottunar urimam, compulsory insurance to drivers, vaaganam ottigalukku kattaya paadhugappu, saalai paadhugappu vidhigal

கருத்துரையிடுக

0 கருத்துகள்