Type Here to Get Search Results !

குரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப்படி..??

0
விண்டோஸில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர் லேப் டாப்பில் உள்ள பேட்டரியின் வாழ்நாளை குறைத்து விடும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அய்யோ..அப்போ நான் என்ன பண்றது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம். குரோம் பிரவுசர் மட்டும் பிரச்சனை என்றால் பின் மற்ற பிரவுசர்கள் என்ன செய்கின்றன.
                                        
system clock tick rate

  இந்த பிரச்சனையை முழுவதும் தெரிந்து கொள்ள முதலில் system clock tick rate பற்றி தெரிந்து கொள்வது அவசியம். system clock tick rate என்பது விண்டோஸ் தனக்குள்ளாக வைத்துக் கொண்டிருக்கிறது. விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகின்றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்த, அல்லது தான் வேண்டப்படாத காலத்தில் ப்ராசசர் தூங்கும் நிலையில் உள்ளது.> வரையறை செய்யப்பட்ட கால இடைவெளியில் எழுந்து தான் செயல்பட வேண்டுமா என்று பார்த்து, சூழ்நிலைக்கேற்ப செயல்படுகிறது. இந்த இடைவெளி காலத்தினை குரோம் 1.000ms ஆக குறைத்து செட் செய்கிறது., இது 15.625 milliseconds ஆக இருக்கும்.

Chrome Browser vs computer battery life, Chrome browser eats battery power, defects of using chrome browser
அதாவது ப்ராசசர், ஒரு விநாடியில் 64 முறை விழித்தெழுந்து என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பதனைப் பார்க்கிறது. அதே குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடன், இந்த கிளாக் டிக் வேகத்தினை 1.000ms என செட் செய்து கொள்கிறது. இதைத் தொடர்ந்து ப்ராசசர் ஒரு விநாடியில் 1000 முறை விழித்தெழுந்து என்ன நடக்கிறது எனப் பார்த்து செயல்படுகிறது. 64க்கும் 1000க்கும் பெருத்த வேறுபாடு உள்ளது அல்லவா. இதனால், 25 சதவீதம் கூடுதலாக மின் சக்தி உறிஞ்சப்படுகிறது. பலரும் இந்த பிரச்சனையை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.                                    

அப்போ மற்ற பிரவுசர் என்ன செய்கிறது? தற்போது புழக்கத்தில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் பிரவுசரில் இந்த டிக் ரேட் பொதுவாக, 15.625ms ஆக உள்ளது. ஆனால், அதிக வேலைப் பளு உள்ள தளத்திற்குச் செல்கையில், இது தானாக உயர்கிறது. எடுத்துக்காட்டாக, யு ட்யூப் தளம் சென்று, அங்கு உள்ள விடியோ பைல் ஒன்றை இயக்கும் போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதனை 1.00ms ஆக உயர்த்துகிறது. விடியோ பைலை மூடி, இந்த டேப்பினை மூடும்போது, பழையபடி இந்த வேகம் 15.625msக்குத் திரும்புகிறது. ஆனால், குரோம் பிரவுசர் திறக்கப்படுகையில் இது அதிகமாக்கப்பட்டு, பிரவுசர் மூடப்படும் வரை அப்படியே உள்ளது. மீண்டும் இதனைக் குறைத்து அமைக்கும் திறன் குரோம் பிரவுசருக்குத் தரப்படவில்லை. மைக்ரோசாப்ட், இது போல கிளாக் ரேட்டினை 1.00ms என அமைத்துக் கொள்வது தவறானது என்று கூறுகிறது.
                                           
பெர்சனல் கம்ப்யூட்டரின் நிலை

குரோம் பிரவுசர் திறந்த நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரின் மின்சக்தி பயன்பாடு 15 முதல் 20 வாட் ஆக உள்ளது. குரோம் பிரவுசரை மூடுகையில், மின் சக்தி பயன்பாடு 12 முதல் 15 வாட்ஸ் ஆக இருந்தது. இந்த மின் சக்தி கூடுதல் அல்லது குறைதல் பெரிய பிரச்னையை ஏற்படுத்துவதில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில் இது பிரச்னையை ஏற்படுத்தும். ஏனென்றால், இங்கு மின் சக்தி பயன்பாடு என்பது நாம் தொடர்ந்து கண்காணித்து செம்மைப் படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். தேவை இல்லாமல், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி சக்தியை வீணடிக்க வேண்டியதில்லை.

தீர்வு தான் என்ன?

கூகுள் நிறுவனத்தின் பக் ட்ரேக்கரில் (https://code.google.com/p/chromium/issues/detail?id=153139) இந்தப் பிரச்சனையைப் பதியலாம். அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்கள், இது குறித்துப் பதிவு செய்தால், கூகுள் இதனைத் தீவிரமான ஒன்றாகக் கருதலாம்.

உங்களுக்கு வேற வேலையில்லை என்ன ஆனாலும் பரவாயில்லை குரோம் பிரவுசரை பயன்படுத்துவோம் என முடிவுக்கு வந்துள்ளனர்.  அடுத்த தீர்வு, குரோம் பிரவுசர் பயன்படுத்துவதை நிறுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறுவதே.

ஆனால், இந்த இரண்டு பிரவுசர்களில் உள்ள மற்ற பிரச்சனை இவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

கூகுள் நிறுவனத்தின் பிரவுசர் வல்லுநர் குழுவிற்கு இந்த பிரச்சனை சென்றதாகவும், இது குறித்தும் இதற்கான தீர்வு குறித்தும் ஆய்வு செய்து தீர்வினைக் கண்டறியும்படி கூகுள் வல்லுநர் குழுவிற்கு அறிவுரை கூறியுள்ளதாகவும் அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: http://www.anbuthil.com

கம்பியுடர் செய்திகள்தெரிந்து கொள்ளுங்கள் Tags: Chrome Browser vs computer battery life, Chrome browser eats battery power, defects of using chrome browser, kanini seidhigal, computer news in tamil, Tamil computer magazine, Firefox browser vs google chrome browser,

கருத்துரையிடுக

0 கருத்துகள்